ஃபிப்ரவரி 10, 2018 அன்று திரு. சத்தியமூர்த்தி அவர்களின் ஒருங்கிணைப்பில், அறநெறி அறக்கட்டளை 4வது தியாகராஜ ஆராதனை இசை நிகழ்ச்சியை ஆர்க்கேடியாவில் விமர்சையாக நடத்தியது. காலை 10.30 மணியளவில், இருபதுக்கும் மேற்பட்ட கர்நாடக இசைப் பாடகர்கள், மிருதங்க வித்வான்கள், வயலின் கலைஞர்கள் மற்றும் பிற கலைஞர்கள் மேடையேற, பஞ்சரத்ன கீர்த்தனையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
தென்கலிஃபோர்னியாவைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கர்நாடக இசைப் பள்ளிகள் பங்கேற்றன. மாணவர்கள் மற்றும் குருக்கள் தனியாகவும், இணைந்தும் கீர்த்தனைகளைப் பாடினர்.
மாலைவரை, சங்கீதம் பயில்வோரும், வளர்ந்துவரும் கலைஞர்களும் இணைந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (Caltech-Pasadena) மாணவர்கள், தாங்கள் வடிவமைத்த இசைக்கருவிகளுடன், கீர்த்தனைகள் பாடி மெய்சிலிர்க்க வைத்தனர். மாலை 6 மணியளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
அதிக விவரங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புக: pasadena.aradhana@gmail.com
சுஜாதா சுப்ரமணியன், தென்கலிஃபோர்னியா |