வெண்டைக்காய் எல்லா நாட்டினராலும் விரும்பப்படுகிற காய்கறி. இதில் நார்ச் சத்தும் அதிகம் உள்ளது. அமெரிக்கர்கள் இதை வைத்து சூப் கூட செய்து சாப்பிடுவர். வெண்டைக்காய் இங்கு ஓக்ரா(Okra) என்ற பெயரில்
விற்கப்படுகிறது. வெண்டைக் காய்க்கு ஒரு கொழ கொழப்புத் தன்மை உள்ளது. வெண்டைக்காயின் நுனியையும் அடியையும் அதிக அளவில் வெட்டி, சமையல் செய்வதால் இந்த கொழ கொழப்புத் தன்மை அதிகம்
வெளிப்படுகிறது. வெண்டைக்காயை கழுவிய பின்னர் அதில் உள்ள ஈரத்தை நன்றாக துடைத்து விட்டு சமையல் செய்வதாலும் இந்த தன்மை நன்கு குறையும்.
வெண்டைக்காய் புளிப்பு தித்திப்பு (sweet and sour) பச்சடி
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 10 திடீர் புளி (Instant tamarind) - 1/2 தேக்கரண்டி வெல்லம் பொடித்தது - 1/2 கிண்ணம் மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை பச்சை மிளகாய் - 2
செய்முறை
வெண்டைக்காய்களை நன்றாக கழுவி பின்னர் அதன் நுனியையும் அடியையும் சிறிது அளவு வெட்டி எறிந்து விட்டு பின்னர் அவற்றை சிறிய துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.
ஒரு அடி கனமான வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிதமான தியில் வைத்து வெண்டைக்காய் துண்டங்ககளை போட்டு மஞ்சள் பொடி போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். இதனுடன் சிறிது தண்ணீரில் திடீர் புளியை (Instant tamarind) கரைத்து இதில் விடவும். உப்பு சேர்க்கவும். சிறிது நேரம் கொதித்தபின் வெல்ல தூளை இதில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும். நன்றாக சேர்ந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி மீதி உள்ள எண்ணெயில் கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |