அச்சமில்லை அச்சமில்லை


சாயப்பட்டறைக் கழிவுகளால் நிலமும், நிலத்தடி நீரும், விவசாயமும் பாதிக்கப்படுவதை வீரியத்துடன் சொல்ல வருகிறது 'அச்சமில்லை அச்சமில்லை'. இயக்குநர் அமீரின் உதவியாளர் முத்து கோபால் இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தைத் தயாரித்திருப்பதுடன் முக்கிய வேடத்தில் நடித்துமிருக்கிறார் அமீர். ஹரீஷ் மற்றொரு கதாநாயகன். நாயகியாக சாந்தினி நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் இயக்குநர் முத்துகோபாலும் நடித்திருக்கிறார். அமீருக்கு அரசியல்வாதி வேடமாம். படம்பற்றி இயக்குநர் முத்து கோபால், "இதுபோன்ற ஒரு துணிச்சலான கதையில் நாமே நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் நிலத்தை விற்றுப் பணத்தைக் கொடுத்து படத்தை எடு என்றார் எனது அப்பா. சாயப்பட்டறைகளால் பாழ்பட்ட நிலங்கள் பற்றி முதலில் பேசவரும் இந்தப் படத்துக்கு நிலத்தை விற்ற பணமே உதவி இருக்கிறது" என்கிறார். இசை: அருண்குமார்.

அரவிந்த்

© TamilOnline.com