திமிரு புடிச்சவன்


விஜய் ஆண்டனி நாயகனாகவும் நிவேதா பெத்துராஜ் நாயகியாகவும் நடிக்கும் படம் 'திமிரு புடிச்சவன்'. எஸ்.எஸ். ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கணேஷா இயக்குகிறார். இதில் காவல்துறை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடிக்கிறார். "இதுவரை பார்த்திராத ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை இதில் சொல்கிறேன். ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் அன்றாடச் சம்பவங்கள், அவர்களிடையே நிலவும் உறவு எல்லாமே சுவாரசியம். கதாநாயகி இந்தப் படத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் ஏராளம், அதற்காக அவர் பிரத்தியேகமாக பயிற்சி மேற்கொண்டார். வழக்கமான போலீஸ் வெர்சஸ் வில்லன் கதையாக இல்லாமல், மனதின் வியூகங்களில் பயணிக்கும்" என்கிறார் இயக்குனர். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்திற்காக சிலம்பம் கற்று வருகிறாராம் விஜய் ஆண்டனி.

அரவிந்த்

© TamilOnline.com