நடிகையர் திலகம்


நடிகையர் திலகம் என்று போற்றப்பட்டவர் சாவித்ரி. அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சமந்தா பத்திரிக்கையாளராக நடிக்கிறார். ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும், கதாசிரியராக பிரகாஷ்ராஜும் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது இப்படம். படத்தில் நடிப்பதற்கு முன்பு சாவித்ரி பற்றிய பல அரிய தகவல்களை அவருடன் பணியாற்றிய மூத்த திரைப்படக் கலைஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாராம் கீர்த்தி சுரேஷ். சபாஷ்.

அரவிந்த்

© TamilOnline.com