முட்டைகோஸ் சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கிண்ணம்
முட்டைகோஸ் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
எண்ணெய் - 2 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

அரைக்க:
தேங்காய்த்துருவல் - 1/4 கிண்ணம்
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 8
இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
கொத்துமல்லித் தழை - 1 கட்டு

தாளிக்க:
கடுகு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
முந்திரிப்பருப்பு - 8
கொத்துமல்லித் தழை (அரிந்தது) - அலங்கரிக்க
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

செய்முறை
அரிசியை வேகவைத்து ஒரு தட்டில் பரப்பி ஆற வைக்கவும். மசாலாவைக் குறைந்த தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிப்புப் பொருட்களைச் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் முட்டைகோஸைச் சேர்த்து தண்ணீர் வற்றும்வரை வதக்கவும்.
அரைத்த மசாலாவைச் சேர்த்து நல்ல வாசனை வரும்வரை கலக்கவும்.

இதில் ஆறிய சாதமும் தேவையான அளவு உப்பும் சேர்த்து சாதம் சூடாகும்வரை கலக்கவும். கொத்துமல்லி, கறிவேப்பிலை தூவி அடுப்பிலிருந்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

வசந்தி வீரராகவன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com