பொங்கல் பாடல் வெளியீடு
ஜனவரி, 20, 2018 அன்று, அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் ஒன்றை, தமிழகத் தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு. மாஃபா பாண்டியராஜன் மற்றும் டாக்டர். ராஜன் நடராஜன் வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் திருமதி.பூர்ணிமா பாக்கியராஜ் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சி வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா மேடையில் நடைபெற்றது.

நியூ ஜெர்சி வசந்த் வசீகரனின் VSharp இசைக்குழு இசையமைத்து வலைத்தமிழ்.காம் மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் இணைந்து இந்தப் பாடலைத் தயாரித்திருந்தது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்துடன் தமிழிருக்கை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்தார் பாண்டியராஜன் அவர்கள். ராஜன் நடராஜன், மேரிலாந்து மாகாணத்தின் போக்குவரத்து ஆணையர் மற்றும் முன்னாள் மேரிலாந்து வெளியுறவுத்துறை துணைச்செயலர் என்பது குறிப்பிடத் தக்கது.

நியூ ஜெர்சி மணிகண்டன் ஆனந்தராஜ் தலைமையில் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த ச. பார்த்தசாரதி, நித்திலச்செல்வன் முத்துசாமி, யோகராஜ் சொக்கலிங்கம், மகேந்திரன் பெரியசாமி, ராஜேஷ் சுவாமிநாதன், ராஜாராம் சீனுவாசன், ஐயப்பன் ராமன் ஆகியோர் இணைந்து பாடலை எழுதியிருந்தனர். இதற்கு தமிழ்ச் சங்கத்தின் 25க்கும் மேற்பட்டோர் நடனமாடியது, காணொளியாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

இது முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



லெட்சுமிபிரியா பார்த்தசாரதி,
வாஷிங்டன்

© TamilOnline.com