2018 மே 27-28 தேதிகளில் தமிழ்நாடு அறக்கட்டளையின் 44வது தேசிய மாநாடு நியூ ஜெர்சியில் நடைபெறவுள்ளது. 'ஊரு நம்ம ஊரு' என்ற மையக் கருத்தில் இது அமையும். "தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் TNF செய்துவரும் சேவைப்பணிகள் பற்றி அறிய இதுவொரு நல்ல வாய்ப்பு" என்கிறார் TNF தலைவர் சோமலெ சோமசுந்தரம். மதுரை முரளிதரனின் 'கர்ணன்' நாட்டிய நிகழ்ச்சி, பாடகி நித்யஸ்ரீயின் தமிழிசை விருந்து, நானு எழுதிய 'அப்பா.. அப்பப்பா...' நகைச்சுவை நாடகம், சத்யபிரகாஷ், பூஜா மற்றும் அபிமானப் பாடகர்கள் பலரின் மெல்லிசை விருந்து, ATEA அமைப்புடன் இணைந்து தொழில்முனைவோர் கருத்தரங்கம், தமிழ்நாட்டில் அமெரிக்கத் தமிழ் இளைஞர்களின் சேவைகள் பற்றிய கருத்தரங்கம் உட்படப் பல நிகழ்ச்சிகள் மாநாட்டில் இடம்பெறும். "ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன" என்கிறார் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் நியூ ஜெர்சி கிளைத்தலைவருமான பாலாஜி பிரகாஷ் ராவ்.
முழு விவரங்களுக்கு: http://convention.tnfusa.org மின்னனஞ்சல் : convention@tnfusa.org
|