நட்பா? காதலா? இந்தக் கேள்வியைக் கருவாகக் கொண்டது டீக்கடை பெஞ்ச். நாயகனாக ராமகிருஷ்ணன் நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். உடன் மனிஷா, நட்ராஜன், அத்திக், சித்ராலட்சுமணன், டி.பி. கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ராம்ஷேவா. "ராமகிருஷ்ணன் குடும்பத்திற்குச் சொந்தமான பரம்பரைச் சொத்து ஒன்றை நாயகி தருஷி, நாயகன் வீட்டிலிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்து செல்கிறாள். இதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க இருவருக்கும் மோதல் உண்டாகிறது. இதனால் நண்பர்களான நிரஞ்சன், நடராஜ், அத்திக், சிவா மற்றும் குடும்பத்தினரிடையே பகை உண்டாகிறது. அங்கே நட்பு வென்றதா, காதல் வென்றதா என்பதை நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறோம்" என்கிறார் இயக்குனர். என்ன வேணா இருக்கட்டும், அது ஏன் டீக்கடை பெஞ்ச்சுக்குப் போச்சுன்னு கேக்குறார் குசும்பு குமாரசாமி.
அரவிந்த் |