கொரில்லா


ஜீவா நாயகனாக நடிக்கும் படம் கொரில்லா. நாயகி ஷாலினி பாண்டே. கொள்ளையடிப்பதை மையக் கருவாகக் கொண்ட இப்படத்தில் சிம்பன்சி ஒன்றும் நடிக்கிறது. காமெடி த்ரில்லர் இது. டான் சாண்டி இயக்குகிறார். "சிம்பன்சிகள் மிகவும் அறிவுள்ளவை. எப்போதும் புன்னகைப்பவை, குறும்பானவை. இப்படத்தில் சிம்பன்சி, ஆக்‌ஷன் மற்றும் காமெடி நிறையச் செய்யும். ரசிகர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்." என்கிறார் இயக்குனர். இசை: சாம் சி.எஸ். அது சரி, சிம்பன்சியும் கொரில்லாவும் ஒண்ணா!

அரவிந்த்

© TamilOnline.com