ஹார்வர்டு தமிழிருக்கை: இலக்கு வெகு அருகே
ஹார்வர்டு பல்கலையில் தமிழிருக்கை அமைக்கும் முயற்சி விரைந்து இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்குத் தேவையான ஆறு மில்லியன் டாலரில், உலகத் தமிழர்கள் இதுவரை சுமார் $5,750,000 திரட்டிக் கொடுத்துவிட்டனர்!

ஜனவரி 20, 2018 அன்று டொராண்டோ நகரில் 'கனடாதமிழ்காங்கிரஸ்' விழாவில் ஒன்டேரியோ மாநிலப் பிரதமர் கேத்லீன் வின் அம்மையார் ஹார்வர்டு தமிழிருக்கை அமைப்பு நிறுவனர்கள் Dr. விஜய் ஜானகிராமன் மற்றும் Dr. சுந்தரேசன் சம்பந்தம் அவர்களுக்கு 'Leaders for Change' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தார். இதற்கெனச் சுமார் ஒன்றரை மில்லியன் டாலர் வழங்கிய தமிழக அரசின் சார்பாக ஜனவரி 19 அன்று ஹார்வர்டு பல்கலை வளாகத்துக்கு வருகை தந்த தமிழகத் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மா. ஃபா பாண்டியராஜன் பேராசிரியர்களைச் சந்தித்து உரையாடினார். தேமதுரத் தமிழ்மொழியை உலகமுழுவதும் பரப்புவதற்கென ஓர் அமைப்பை உருவாக்குவதில் பாண்டியராஜன் ஆர்வம் தெரிவித்தார். மீதி நிதியைத் திரட்டும் நிகழ்ச்சிகளும் ஆர்வத்துடன் தொடர்கின்றன.

இவற்றில் பெரும்பங்கு கீழ்க்கண்ட மொய்விருந்துகளில் பெறப்பட்டவை
டிசம்பர் 16கரோலினா தமிழ்ச் சங்கம் $20,000
டிசம்பர் 23டெலவர் பெருநிலத் தமிழ் சங்கம் $29000
ஜனவரி 7நியூ யார்க் தமிழ் அகாடமி $125,000
ஜனவரி 13வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் $31000
ஜனவரி 21கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் $30,000


இலக்கை விரைவிலேயே அடைய உதவிய பெருமையை நீங்கள் அடையலாம். நன்கொடைகளுக்கு அமெரிக்க501(C)(3) Non-profit வரிவிலக்கு உண்டு. நன்கொடை அளிக்கவும்,
மேலும் தெரிந்து கொள்ளவும்: harvardtamilchair.org

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி

© TamilOnline.com