உள்ளாட்சித் தேர்தல்!
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோ பர் மாதம் முடிவடை வதை அடுத்து, வருகிற 13, 15 தேதிகளில் (அக்டோ பர்) உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் டி.சந்திரசேகர் முறைப்படி அறிவித்தார்.
மொத்தம் 1.31 லட்சம் பதவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சி தேர்தல் இம்முறை இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கிறது. சென்னை, சேலம், கோவை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளின் தேர்தல் அக்டோ பர் 13ம் தேதியும், மதுரை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளின் தேர்தல் அக்டோ பர் 15 லும் நடைபெறவிருக்கிறது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேயர், நகராட்சித் தலைவர்கள் உள்ளிட் டோ ர் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மறைமுகத் தேர்தலுக்கான புதிய சட்டம் ஒன்று ஒருமனதாக சட்டப்பேரவை உறுப்பினர் களால் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மேயர், துணைமேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக் கான மறைமுகத் தேர்தல் வருகிற 28ஆம் (அக்டோ பர்) தேதி நடைபெறவிருக்கிறது.

உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் அக்டோ பர் மாதம் 18ம் தேதி அறிவிக்கப்பட்டு புதிய உறுப்பினர்களுக்கான பதவி ஏற்புகள் 25ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் கவுன்சிலர்கள் தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நாளுக்கும், உள்ளாட்சித் தலைவர்களைத் தேர்வு செய்யும் நாளுக்கும் 10 நாள் இடைவெளி இருப்பதற்கு அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த இடைவெளி, சில முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் குற்றம் சாட்டினார். இதனைத் தடுக்க உள்ளாட்சித் தேர்தலுக்கும் கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட கூட்டணிகள் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அதே அணியில் போட்டியிடு கின்றன. வழக்கம் போல் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்தே போட்டியிடுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை தேர்வு செய்வதில் அ.தி.மு.க, தி.மு.க கூட்டணிகளிடையே சுமூகமான முறையிலே நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் வெளியிட்ட சின்னங்களில் விஜயகாந்தின் முரசு சின்னம் இடம்பெறாதது அக்கட்சியினரிடையே மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆளும் தி.மு.க அரசின் தூண்டுதல் முரசு சின்னம் முடக்கத்திற்கு காரணம் என்று தேசிய முன்னேற்ற திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com