தேவையான பொருட்கள் இட்லி - 6 வெங்காயம் (பெரியது) - 1 தக்காளி - 3 பச்சை மிளகாய் - 4 வெங்காயத்தாள் - 1/2 கிண்ணம் தேங்காய்த்துருவல் - 2 தேயிலைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு சீஸ் - 1/4 கிண்ணம்
செய்முறை இட்லியைத் தயார் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய், வெங்காயத்தாள், தேங்காய்த்துருவல் ஆகியவற்றைச் சிறிது எண்ணெய்விட்டு வதக்கி, மிக்சியில் அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அரைத்த விழுதைப் போட்டு கிரேவி செய்து கொள்ளவும். அதில் கொஞ்சம் உப்புச் சேர்க்கவும். இட்லிகளைத் துண்டு துண்டாக்கிச் சிறிது எண்ணெய்விட்டுப் பொரிக்கவும்.
ஒரு தட்டில் பரவலாக வைத்து மேலாக கிரேவியை ஊற்றி சீஸ் தூவவும். கொத்துமல்லி, கறிவேப்பிலையை பொடியாய் நறுக்கிப் போடவும். தேவையானால் முந்திரி வறுத்துப் போடலாம். சுவையான இட்லி தயார்.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி |