எங்கோ ஒரு வெளிநாட்டில் இருக்கும் இசைக்கலைஞர்களை எப்படி இத்தகைய தெய்வத்தமிழ்ப் பாடலின் ஜீவனை வெளிக்கொணரும் வண்ணம் இசைக்கருவிகளை ஒருமித்த சுருதியிலும் லயத்திலும் பயில வைத்தார் என்ற மலைப்பு ஏற்பட்டவண்ணம் இருந்தது. ... கூடவே, நிழல்போல இனிமை சொட்டச் சொட்ட இழையும் வயலினும், மந்தரஸ்தாயியின் அழகைக் கொண்டுவரும் 'செல்லோ'வும், ஓரிடத்தில், பஞ்சநடை என்னும் 5 மாத்திரைத் தாளத்தைக் கம்பீரமாகப் பின்னணியில் வாசிக்கும் Western drums -ன் அழகுமாக என்னை ஒரே ஆனந்த வெள்ளத் தில் மிதக்க வைத்தன. இந்த உணர்வு என்றும் என் உள்ளத்தில் நிற்கும். ஒரு கோவிலில் இவ்வகையில் திருவாசகத்தைக் கேட்டுக்கொண்டு வழிபட வேண்டும் என்ற ஆவல் கூடப் பிறந்தது.
பேரா. வி. எஸ். அனந்தநாராயணன், கனடா, அகத்தியம் மடற்குழுவில் |