நூபுரா: 'தசாவதாரம்'
நவம்பர் 4, 2017 அன்று திருமாலின் பத்து அவதாரங்களைச் சித்திரிக்கும் நாட்டிய நிகழ்ச்சியான 'தசாவதாரம் – A Thematic Bharathanatyam presentation' நூபுரா டான்ஸ் அகாடமி மாணவியரால், சிகாகோ Palatine Cutting Hall Performing Arts Center அரங்கில் வழங்கப்பட்டது.

திரு. டி.எச்.தியாகராஜன் (பாடல் மற்றும் இசை), திரு.ஜி. ஸ்ரீகாந்த் (வாய்ப்பாட்டு), திருமதி. திவ்யசேனா மற்றும் திருமதி. மகாலக்ஷ்மி வரதன் (நடன அமைப்பு) பொறுப்பேற்றிருந்தனர்.

நிகழ்ச்சியை வடிவமைத்து இயக்கிய நூபுரா டான்ஸ் அகாடமி நிறுவனர் திருமதி. மகாலக்ஷ்மி வரதன் சென்னை சரசாலயாவின் கே.ஜே. சரசா அவர்களிடம் பரதம் பயின்றவர். நிகழ்ச்சியின் மூலம் வந்த நிதி "Save The Farmers" என்ற தமிழ்நாட்டுத் தன்னார்வ அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

Save The Farmers அமைப்பின் சார்பாக திரு. இராசேசு சுந்தர்ராஜன், மகாலக்ஷ்மி வரதனுக்குக் கேடயம் வழங்கி நன்றி தெரிவித்தார். ஒலி ஓளி அமைப்பு திரு. வில் வரதன் மற்றும் திரு சுவாமி பாலசுப்ரமணியன்; மேடை அலங்காரம் திருமதி. வேமதி நாராயணன்; ஒப்பனை திருமதி. நீலிமா பிரசாந்த், திருமதி பிரேமா பெர்கரி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியைத் திருமதி. தேவி அண்ணாமலை தொகுத்து வழங்கினார்.

தேவி அண்ணாமலை,
சிகாகோ

© TamilOnline.com