கிறிஸ்துமஸ் பெருவிழா
டிசம்பர் 2, 2017 அன்று, கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை குடிகொண்டிருக்கும், டிவைன் சேவியர் பங்கு தேவாலயத்தில், அருட்தந்தை. ஆல்பர்ட் பிரகாசம் தலைமையில் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட திருக்குடிலில் குழந்தை யேசுபாலன் வீற்றிருக்க, கிறிஸ்துமஸ் மரம் விளக்குகளால் ஜொலிக்க, குழந்தைகளுக்காகச் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கிறிஸ்துமஸ் நாட்டிய நாடகமும், கிறிஸ்து பிறப்புப் பாடல்களும், சிறுவர்களால் வழங்கப்பட்டன. சான்டாகிளாஸ் வந்து பரிசுப் பொருட்களை எல்லோருக்கும் வழங்கினார்.

டிசம்பர் 24ம் நாள் நள்ளிரவு, இரவு 11:30 மணியளவில் கிறிஸ்து பிறப்புப் பாடல்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து, 'பொசாடா' எனப்படும், 2000 வருடங்களுக்கு முன்பு, புனித சூசையப்பரும், கன்னி மரியாளும், பெத்லஹேம் நகரில் மாட்டுத் தொழுவத்தில் குழந்தைபெற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதன்பின், ஆடம்பர திருப்பலியா, அருட்தந்தையர் ஆல்பர்ட் பிரகாசம், சாமி துரை, ஸ்டீபன், ஜோசப் தாஸ், மற்றும் ஜோசப் ராஜ் ஆகியோரால் நிறைவேற்றப்பட்டது. அருட்தந்தை. ஆல்பர்ட் பிரகாசம், தனது மறையுரையில், காலம் கனியும்வரை காத்திருந்தால், கடவுளே நம்மைக் காண வருவார் என்றும்,

யேசு கிறிஸ்து, உலகிற்கு மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் கொண்டுவந்ததையும் எடுத்துரைத்தார். திருப்பலிக்கு பின், உணவு பரிமாறப்பட்டு திருவிழா இனிதாக நிறைவுற்றது.

ஜோசஃப் சௌரிமுத்து,
லாஸ் ஏஞ்சலஸ்

© TamilOnline.com