TNF: விரிகுடாப்பகுதி கூட்டம்
டிசம்பர் 3, 2017 அன்று தமிழ் நாடு அறக்கட்டளை சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி கிளையின் கூட்டம் மில்பிடாஸ், கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. கிளைத் தலைவர் உஷா சந்திரா அறக்கட்டளையின் நோக்கம், ஏபிசி பணித்திட்டம், அன்பாலயம், கோடைக்கால இன்டெர்ன்ஷிப் போன்றவற்றை எடுத்துரைத்தார்.

விஷ் அருணாச்சலம் தாம் செய்துமுடித்த 'தேவகோட்டை பெத்தாள் ஆச்சி பெண்கள் பள்ளிக்கட்டடத் திட்டம்' சிறப்பாக முடிந்ததை விளக்கினார். பள்ளியைப்பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. சான் ரமோன் பள்ளி இளநிலை மாணவர் அரவிந்த் கண்ணப்பன், பாம்புக்கடி முன்தடுப்புத் திட்டம் சிறப்பாக ஆரம்பித்து நடப்பதை எடுத்துரைத்தார். பிரபல அமெரிக்கத் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் ரீட் வழங்கிய 'Minutes to Die' ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜேம்ஸ் ரீட் பாம்புக்கடி திட்டத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி பேசினார்.

2017 கோடைக்கால மாணவப் பயிற்சியாளர்கள் விஷால் நாராயண், உமேஷ் நடேசன், பிரணவ் செந்தில்குமார் ஆகியோர் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.

கிளையின் புதிய நிர்வாகிகளாகப் பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்: உஷா சந்திரா - தலைவர்; முருகப்பன் நடேசன் - செயலர்; கல்பனா கிருஷ்ணமூர்த்தி - பொருளாளர்; நாராயண் பாலசுப்பிரமணியன் - பொதுக்குழு உறுப்பினர். தவிர விஷ் அருணாசலம் மற்றும் லேனா கண்ணப்பன் விசேட ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்.

விஷ் அருணாசலம் & உஷா சந்திரா,
ஃப்ரீமான்ட்

© TamilOnline.com