சுருதிஸ்வரா: பாரதி பிறந்தநாள்
டிசம்பர் 10, 2017 அன்று சுருதீஸ்வரா மியூசிக் ஸ்கூல், நியூ ஜெர்சி, மஹாகவி சுப்ரமணிய பாரதியின் 135வது பிறந்தநாள் விழாவை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவில் (பிரிட்ஜ்வாட்டர்) அரங்கத்தில் கொண்டாடியது. பள்ளி நிறுவனர் திருமதி. நிர்மலா ராஜேஷ் கடவுள் வாழ்த்து பாடினார்.

முதலில் டாக்டர். ஏ.வி. ரகுநாத் (நிறுவனர், பாரதி சொசைட்டி, நியூ யார்க்) சிறப்புரை ஆற்றினார். பின்பு மஹாகவி பாரதியின் கொள்ளுப்பேத்தி திருமதி. சஷி பலிஜா உரையாற்றி, பாட்டுப் பாடினார். பிறகு இலங்கை தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் திருமதி. கார்த்தி வசீகரன் உரையாற்றினார். இறுதியாக நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கல்யாண் முத்துசாமி உரையாற்றினார். சுமார் இருநூறு குழந்தைகள் பங்குபெற்று பாரதியின் பாடல்களை அருமையாகப் பாடினர். ஒரு குழந்தை பாரதியாக வேஷமிட்டுக் கவிதை படித்தது நன்றாக இருந்தது. நிர்மலா மற்றும் ராஜேஷ் நன்றி கூறினர்.

திருமதி செல்லம் ராமமூர்த்தி,
நியூ ஜெர்சி

© TamilOnline.com