கிறிஸ்து பிறந்த நன்னாளை அட்லாண்டா தமிழ்ச்சபை சிறப்பாகக் கொண்டாடியது. ஆரம்ப நிகழ்ச்சியாக சபையார் வீடு வீடாகப் போய் கிறிஸ்து பிறப்பு பாடல்களைப் பாடினர். வாலிபர் சிறுவர்களின் கிறிஸ்து பிறந்த நாள் நிகழ்ச்சி டிசம்பர் 10ம் தேதி நடைபெற்றது. போதகர் பால்மர் பரமதாஸ் பிள்ளைகளைக் கடவுளின் வழியில் வளர்க்கவேண்டும் என்ற கருத்தில் செய்தியைப் பகர்ந்து கொண்டார்.
டிசம்பர் 17ம் தேதி பாடல் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினர். துதிப்பாடல்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பற்றி வேதாகமத்திலிருந்து செய்தி கொடுக்கப்பட்டது.
டிசம்பர் 25ம் தேதி அன்று கிறிஸ்துமஸ் ஆராதனை நடந்தது. பாடல் குழுவினர் பாடல்களை பாடினர். கிறிஸ்து நம் வாழ்க்கையில் என்னவிதமான நன்மைகளைச் செய்வார் என்று போதகர் பால்மர் பரமதாஸ் சிறப்புரை ஆற்றினார். தொடந்து சபை பொருளாளர் சகோ. ஆல்பர்ட் தியாகராஜு வருடாந்திர அறிக்கை வாசித்தார். பின்பு பல்சுவை உணவருந்தி சபையினர் இல்லம் திரும்பினர். இப்படியாகக் கிறிஸ்துமஸ் இனிதே நிறைவடைந்தது.
போதகர் பால்மர் பரமதாஸ், அட்லாண்டா |