பக்கா
பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது 'பக்கா'. விக்ரம்பிரபு நாயகனாக நடிக்க, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி நாயகிகளாக நடிக்கின்றனர். சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, வையாபுரி, முத்துகாளை உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T. சிவகுமார் நடித்திருக்கிறார். எஸ்.எஸ். சூர்யா, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கோயில் திருவிழாக்களில் கடைபோட வருபவர்களை மையமாக வைத்துப் படம் உருவாகியுள்ளது. நிக்கி கல்ராணி, ரஜினியைப் போலப் பேசி அசத்தும் 'ரஜினி ராதா' வேடத்தில் வருகிறார். விக்ரம் பிரபு கிரிக்கெட் வீரர் டோனி ரசிகராம். ஹெலிகாப்டர் ஷாட் பார்க்கக் கிடைக்குமா?அரவிந்த்

© TamilOnline.com