தெரியுமா?: சாகித்ய அகாதமி விருதுகள்
சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு காலமான கவிஞர் இன்குலாபுக்கு 'காந்தள் நாட்கள்' என்னும் கவிதைத் தொகுப்பிற்காக தமிழ் மொழிக்கான அகாதமி விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர்கள் இந்திரன், பா. செயப்பிரகாசம், பொன்னீலன் அடங்கிய குழு இந்நூலைத் தேர்ந்தெடுத்துள்ளது. (இன்குலாபின் குடும்பத்தினர் இவ்விருதை ஏற்க மறுப்பதாக அறிவித்துள்ளனர்) மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதைக் கவிஞர், எழுத்தாளர், ஓவியர் யூமா வாசுகி 'கசாக்கிண்ட இதிகாசம்' என்ற மலையாள நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக பெறுகிறார். வி. ஜெயதேவன், டாக்டர் கே. சிவமணி, டாக்டர் சிற்பி பாலசுப்ரமணியன் அடங்கிய குழு இந்நூலைத் தேர்தெடுத்துள்ளது. விருது குறித்து யூமா வாசுகி, "கசாக்கிண்ட இதிகாசம் நாவல் ரொம்ப முக்கியமானது. ஏறத்தாழ 60களில் வெளிவந்தது. இவ்வளவு காலத்துக்குப் பிறகும் நவீனத்தோடும் கலையழகோடும் இருக்கிறது. ஏற்கெனவே இதைப் படித்திருக்கிறேன். நான் அதைப் படித்து ரொம்ப காலத்துக்குப் பிறகு, காலச்சுவட்டில் மொழிபெயர்க்குமாறு கேட்டார்கள். எனக்குப் பிடித்த ஒரு படைப்பு என்பதால், ஆர்வத்தோடு செய்தேன். நல்ல வேலையைச் செய்த திருப்தி இருக்கிறது" என்கிறார். (யூமா வாசுகி பற்றி தென்றலில் வாசிக்க



© TamilOnline.com