சிகாகோ மக்களால் தீக்ஷிதர் மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட வேதவிற்பன்னர் ஸ்ரீ யக்ஞேஸ்வர தீக்ஷிதர் 80வது வயதில் டாலஸ் நகரத்தில் டிசம்பர் 27ம் நாள் இரவு 8:30 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.
காலடியில் 1937ம் வருடம் ஜுன் 30ம் நாளன்று வைதீகக் குடும்பத்தில் பிறந்தார். தரிசனங்கோப்பு கிராமத்தில் வேதப்பயிற்சி பெற்றார். இவர் ஏகசந்தக்ரஹி, அதாவது, எதையும் ஒருமுறை கேட்டால் தவறில்லாமல் திருப்பிச் சொல்லும் சக்தி கொண்டவர்.
கேரளாவில் ஜோதிடமும் நன்றாகக் கற்றார். பிறகு தில்லியில் உள்ள சிருங்கேரி மடத்தின் முத்ராதிகாரியாக இருந்து பல மஹாருத்ரம், சண்டிஹோமம், கும்பாபிஷேகங்கள் நடத்தியுள்ளார். சிருங்கேரி பீடம் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் இவரது வேத சாஸ்திரப் புலமைக்கு பெருமதிப்பு அளித்தார். இவர் தில்லியில் இருந்தபோது திருமதி. ஷ்யாமளாவை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 3 குழந்தைகள். பிறகு இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்த.காலத்தில் தியானம், யோகம் கற்றுக்கொண்டார்.
1990ம் வருடம் சிகாகோவில் ஓர் கோவிலில் பணியேற்றார், காயத்ரி யக்ஞத்திலும் பங்கேற்றார். சிகாகோவில் இருந்த காலத்தில் இவர் பல மஹாருத்ரம், சண்டி ஹோமம், கும்பாபிஷேகங்களைத் தலைமையேற்று நடத்தினார். இதற்கும் மேலாக தனது முதுமைக் காலத்திலும் ஏராளமானவர்களுக்கு நேரிலும், தொலைபேசி மூலமும் வேதம் கற்றுக் கொடுத்தார். காலமாவதற்குச் சில நாட்கள் முன்பும் சிரசாசனம் செய்தார், தனது உணவுப் பழக்கம் மற்றும் யோகப் பயிற்சிகளால் தேகநலத்துடன் இருந்தார். குழந்தை உள்ளமும் நகைச்சுவை உணர்வும் கொண்ட எளிய மனிதர். இவரது வேதப்பயிற்சிப் பதிவுகளைப் பார்க்க: www.gayathriyagna.org
இவரது மறைவு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல அவரது உலகளாவிய மாணாக்கர்களுக்கும் பெரிய இழப்பு. குடும்பத்தாருக்கு உதவ விரும்புவோர் நன்கொடை அளிக்க
தமிழாக்கம்: மீனா சுபி மூலம்: டாக்டர். ராம் நாராயணன் |