சுரைக்காய் முத்தியா
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1/2 கிண்ணம்
ரவை - 1/2 கிண்ணம்
கோதுமை மாவு - 1/2 கிண்ணம்
நறுக்கிய சுரைக்காய் (தோல் நீக்கியது) - 1 கிண்ணம்
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
பச்சைமிளகாய் - 4 அல்லது 5
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி (நறுக்கியது) - 1/4 கிண்ணம்
இஞ்சி - சிறிதளவு
எள் - 2 தேயிலைக்கரண்டி
தயிர் - 1/4 கிண்ணம்
எண்ணெய் - 1/2 கிண்ணம்

செய்முறை
மாவுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். சுரைக்காயைத் துருவிப் போட்டு பச்சைமிளகாய், மிளகாய்ப்பொடி, சீரகம், கொத்துமல்லித் தழை, இஞ்சி விழுது எல்லாம் போட்டு தயிர் விட்டுப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டுப் பிசைந்த மாவை பிடி கொழுக்கட்டை போலப் பிடித்து சீரகம், எள்ளு போட்டு சிவந்தவுடன் உருண்டைகளைப் போட்டுப் புரட்டவும். முக்கால்வாசி புரட்டி, மேலாக ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி மூடிவைக்கவும். பத்து நிமிடம் ஆனதும் எடுத்துப் பார்க்கவும். உருண்டைகள் வெந்திருந்தால் மேலும் சிறிது எண்ணெய்விட்டுப் பிரட்டி மேலாகக் கொத்துமல்லித் தழையைத் தூவி இறக்கவும். முத்தியா ரெடி. சாப்பிட நன்றாக இருக்கும். ஆவியில் வைத்தும் எடுக்கலாம். குஜராத்தில் இது பிரசித்தம். தேங்காய்த் துருவல் போட்டும் செய்யலாம்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com