நவம்பர் 11, 2017 அன்று மாலையில் ரொறொன்ரோவில் ஹார்வர்டு தமிழ் எழுச்சி கீதம் அரங்கேறியது. அதேநேரம் பாடல் (muzik 247) சென்னையிலும் உலக மக்களுக்காக வெளியிடப்பட்டது. பாடலை எழுதியவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன். இசையமைத்தவர் 'பண்ணையாரும் பத்மினியும்' போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன். பாடியவர் சூப்பர்சிங்கர் ஜெஸிக்கா ஜூட்.
பேராசிரியர் டேவிட் ஷுல்மன், தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய சிறப்பு இலக்கியப் பரிசை பெறுவதற்காக ரொறொன்ரோ வந்திருந்தார். விருதை வழங்கிய பின்னர் பாடல் அதே மேடையில் வெளியானது. அவர் தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். பாடலை வெளியிட்ட பின்னர் ஜெஸிக்கா ஜூட் தொடர்ந்து அரவிந்தன் இசைக்குழுவுடன் பல பாடல்களைப் பாடினார். இந்த நிகழ்ச்சி மூலம் அன்றுதிரட்டப்பட்ட $10,000 நிதி ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. அதுதவிர, ஏறக்குறைய $5,000 உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் ரசிகர்களால் தமிழ் இருக்கைக்கு இணையம் வழியே அனுப்பியுள்ளனர்.
உலகெங்கிலுமுள்ள ரசிகர்கள் பாடலை யூட்யூபில் கேட்கலாம்.
நன்கொடை வழங்க விரும்புபவர்கள் harvardtamilchair.org இணையதளத்தில் donate பட்டனை அமுக்குவதன் மூலம் செய்யலாம்.
அ.முத்துலிங்கம் |