நாட்யா: ராமானுஜ தரிசனம்
நவம்பர் 12, 2017 அன்று, 'ராமானுஜ தரிசனம்' (Ramanuja Darishanam: The Beacon of Spiritual Light) என்ற பிரம்மாண்டமான நாட்டிய நாடகத்தை, ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்திவிழாவை ஒட்டி நாட்யா டான்ஸ் தியேட்டர் (சிகாகோ) வழங்கியது. நாட்யாவின் கலை இயக்குனர் திருமதி ஹேமா ராஜகோபாலன் நடனம் வடிவமைத்திருந்த இந்த நாடகத்துக்குச் சிறப்பான இசையை திரு. ராஜ்குமார் பாரதி அமைத்திருந்தார். நாடகம் துவங்குவதற்கு முன்னர் திரு. துஷ்யந்த் ஸ்ரீதர், ஸ்ரீமத் ராமானுஜரின் தத்துவ விளக்கம் குறித்து ஒருமணி நேரம் உரையாற்றினார்.

வண்ணமயமான ஆடையணிகள் நாடகத்தைக் கண்ணுக்கு விருந்தாக்கின. ஜெனிஃபர் க்யூல்ஸ் வடிவமைத்த டைனமிக் ஒளியமைப்பு அதனை இன்னும் சிறப்பாக்கியது. 180 நடனமணிகளைக் கொண்டு நுணுக்கமாக நடனவடிவம் கொடுத்த ஹேமா ராஜகோபாலனின் கைவண்ணத்தில் தேர்ந்த நாட்டியக்காரர்களோடு சேர்ந்து நாட்யா மாணவர்களும் மேடையேறும் வாய்ப்பைப் பெற்றனர்.

செய்திக்குறிப்பிலிருந்து
படங்கள்: சிபு குட்டி

© TamilOnline.com