நவம்பர் 18, 2017 அன்று Pocahontas middle school (12000 Three Chopt Road, Henrico, VA-23233) வளாகத்தில் ஆடுகளம் என்ற பெரியவர்களுக்கான கலைநிகழ்ச்சி ஒன்றை ரிச்மண்ட் தமிழ் சங்கம் நடத்தியது. எத்தனை வயதானாலும் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் மேடையேறி ஆடமுடியும் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்றாக அமைந்தது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குழந்தை மறைந்திருக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் வெளிவந்து துள்ளலாட்டம் போடும் என்பதை இது புரியவைத்தது.
கலை நிகழ்ச்சி என்றால் ஆடல் பாடல் மட்டுமல்ல, ஆடையலங்கார அணிவகுப்பு, நாடகம், பட்டிமன்றம் எல்லாம்தான் நடந்தேறின. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திரு. பாலா மற்றும் திரு. சுந்தர் முன்னிலையில் 'Save Tamilnadu Farmers' அமைப்புக்கான காசோலை வழங்கப்பட்டது. வருங்கால சந்ததியினரிடம் தமிழைக் கொண்டு செல்லும் முயற்சியாக ரிச்மண்ட் தமிழ்ப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஐந்நூறு மாணவர்களை நோக்கி அது பயணித்துக் கொண்டிருப்பதாக தமிழ்ப்பள்ளி இயக்குனர் திரு. முத்துராஜ் குறிப்பிட்டார். ஆடுகளம் அமர்க்களமாக நடந்து முடிந்தது.
அகிலா கண்ணன், ரிச்மண்ட், வர்ஜீனியா |