கான்கார்டு சிவமுருகன் கோவில்
நவம்பர் 18, 2017 அன்று கான்கார்டு சிவமுருகன் கோவில் காணிக்கைப் பொருட்களின் ஏலம் மில்பிடாஸ் ICCயில் நடந்தது. வெள்ளியில் பல பொருட்களும், அழகாக நகைகளுடன் பொருந்தியமைந்த புடவைகளும், வேலைப்பாடுடன் கூடிய காமதேனு போன்ற சிலைகளும், தஞ்சாவூர் ஓவியங்களும் கண்களைக் கவர்ந்தன. உள்ளூர் ஓவியர் கிருஷ்ணன் மெய்யப்பன் திருமோகூர் குளம், யானை, மலை கொண்ட தனது ஓவியம் ஒன்றைக் கோவிலுக்குச் சமர்ப்பிக்க, அது பெரும் விலைக்குச் சென்றது. திரு. சாத்தப்பன் தனது உறவினரான புகழ்பெற்ற ஓவியர் A.P. ஸ்ரீதர் அவர்களின் 5 ஓவியங்களை ஏலத்திற்குத் தந்தார். அவை மிகவும் விரும்பப்பட்டன.

செல்வி. ஊர்மிளா வுடலி, திரு. நிர்மல் குமார், திரு. கிருஷ்ணா சிவராமபுரம், திரு. சுப்ரா ரமணன், ட்ரைவேலி பம்பாய் ஜாம், திருமதி. அகிலா சுப்பையனின் குழந்தைகள், இன்னும் பலர் சிறப்பாக ஆடிப்பாடி மகிழ்வித்தனர். கூப்பர்ட்டினோ மேயர் திருமதி. சவிதா வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக வந்து சொற்பொழிவாற்றினார். ஃப்ரீமான்ட் கவுன்சிலர் திரு. ராஜ் சல்வான், இந்திய தூதரகத்திலிருந்து திரு. வேங்கட ரமணா வந்திருந்தார்கள். சாஸ்தா ஃபுட்ஸ் திரு. மணி கிருஷ்ணன், போஸ்டல் அனெக்ஸ் திரு. ரமேஷ் தொரைசாமி, திரு. சுரேஷ் ராமசாமி, திரு.ராஜமாணிக்கம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

கோவில் நிர்வாகி திருமதி. மீனா ரவி அண்ணாமலை கோவில் கட்டடப் பணி பற்றியும் அதற்குத் தேவைப்படும் நிதி திரட்டும் பணி பற்றியும் பேசினார். இதற்கு உதவும் தன்னார்வத் தொண்டர்களான திரு. செந்தில்குமார், திருமதி. அனு சுமந்த், திருமதி. உமா மாரிமுத்து, திரு. சுரேஷ் தேவராஜன், திரு. குப்பே ஸ்ரீனிவாஸ், கட்டட வடிவமைப்பாளர் திரு. சரத் லால், திரு. அருண் ஷா, திரு. நிரவ் ஷா ஆகியோர் மேடையில் அறிமுகப்படுத்தி கௌரவிக்கப்பட்டனர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com