அட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு
தேவன் மனிதனாய் அவதரித்த சம்பவம்தான் கிறிஸ்துமஸ். இதனைக் கொண்டாட வாருங்கள் அட்லாண்டா தமிழ் சபைக்கு.

கிறிஸ்து பிறந்த நற்செய்தியை அனைவருக்கும் அறிவிக்கும் வண்ணம் கிறிஸ்துமஸ் பாடல்களை வீடுதோறும் அவர்கள் அழைப்பிற்கிணங்கப் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு மாலைகளில் சபை போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களும் சபையாரும் பாடி கிறிஸ்து பிறந்த நற்செய்திகளைக் கூறுவார்கள்.

சபையின் ஞாயிறு பள்ளி மாணவ மாணவியரின் நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் (Youth & Children Christmas Service) டிசம்பர் 10ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறும். சபையின் பாடல் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சி டிசம்பர் 17 ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறும்.

குடும்பப் பாடல் ஆராதனை (Family Sing Song Service) ஒவ்வொரு குடும்பத்தினரின் திறமைகளையும் இறைவன் அருளிய தாலந்துகளையும் வெளிப்படுத்தும் வண்ணமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி டிசம்பர் 24ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு சபை தேவாலயத்தில் நடைபெறும்.

கோலாகல நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக டிசம்பர் 25ம் தேதி திங்கள் காலை 10:00 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெறும். அதில் போதகர் பால்மர் பரமதாஸ் அவர்கள் விசேசச் செய்தி அளிப்பார்கள். மதியம் கிறிஸ்துமஸ் பல்சுவை விருந்து உண்டு.

வருடத்தின் கடைசி நாட்களாகிய (வியாழன் வெள்ளி சனி) டிசம்பர் 28 முதல் 30ம் தேதி வரை தினமும் ஆலயத்தில் காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை உபவாச ஜெபம் நடைபெறும். இதில் கலந்துகொண்டு தம்மைச் சுத்திகரித்து அடுத்த வருடத்திற்குள் நுழைய ஆயத்தமாகுவோம்,.

2017ம் வருடத்தை ஆலயத்தில் தொடங்கியவாறு புதுவருடத்தை ஆலயத்தில் ஆரம்பிக்கும் வண்ணம் டிசம்பர் 31ம் தேதி ஞாயிறு இரவு 10:30 மணிக்கு விசேசித்த காத்திருப்பு ஆராதனை (Watchnight Service) நடைபெறும். புதிய ஆண்டை தேவனுடைய சன்னிதியில் தொடங்குவதே இதன் நோக்கம். டிசம்பர் 31ம் தேதி ஞாயிறு இரவு 10:30 மணி ஆராதனைக்குக் குடும்பமாக வாருங்கள்; 2018 புதிய வருடத்தை ஆலயத்தில் தொடங்கி ஆசீர்வாதம் பெறுங்கள்!

மேலும் விபரங்களுக்கு:

போதகர் பால்மர் பரமதாஸ்

© TamilOnline.com