ஒரு கதை சொல்லட்டுமா


ஆஸ்கர் உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவரும், ஒலி வடிவமைப்பாளருமான ரசூல் பூக்குட்டி நாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு கதை சொல்லட்டுமா'. பிரசாத் பிரபாகரன் இயக்குகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இயக்குநர், "கேரளாவில் உள்ள திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கொண்டாடும் விழாவாகும். ஏழுநாள் நடைபெறும் திருவிழா. இதில் ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் நூற்றுக்கணக்கான இசைக் கருவிகளை வாசிக்கும்போது மேஜிக்காக இருக்கும். இந்த எல்லா ஒலிகளையும் ஒலிப்பதிவு செய்ய ஆசைப்படும் ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திற்காக பூரம் திருவிழா ஒலிகளைப் பதிவுசெய்தனர். 22 கேமராக்களைக் கொண்டு அந்த விழாவில் வாசித்த 300க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களை படமாக்கியுள்ளோம். கண் பார்வை இல்லாதவர்களும் கதையை ரசிக்கும்படி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது." என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com