டிசம்பர் 9, 2017 சனிக்கிழமையன்று சிகாகோ பெருநகர் இந்துக் கோவிலில் தங்கமுருகன் விழா நிகழவுள்ளது. இந்த விழா கடந்த பதினாறு ஆண்டுகளாகத் திரு. கோபாலகிருஷ்ணன் இராமசாமி தலைமையில் நடந்துவருகிறது.
திருப்பள்ளியெழுச்சி மற்றும் முருகன் அபிடேகத்துடன் காலை ஏழுமணி அளவில் தொடங்கி இரவு ஒன்பதரை மணிவரை தொடர்ந்து பற்பல கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். சிறுவர் முதல் பெரியோர் வரை சுமார் 350 பேர் திருமுருகனைப் பாடி, ஆடி, அவன் மகிமை பேசி, இசை, வாத்தியம், பஜனை எனப் பலவாறாகத் தங்கமுருகனுக்கு விழாக் காணவுள்ளனர்.
இந்த வருடச் சிறப்பு விருந்தினராகத் திரு. நமசிவாயம் அவர்கள் பங்கேற்கிறார். சிறந்த முருக பக்தரும், தமிழ்க் கவிஞரும், சொற்பொழிவாளருமான இவர் முருகனை பற்றிச் சிறப்புரை ஆற்றவிருக்கிறார். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
உமாபதி பட்டர், சிகாகோ, இல்லினாய் |