டொராண்டோ நிகழ்வுகள்
நடந்தவை

டோரான்டோவில் (கானடா) தியாகராஜ ஆராதனை விமரிசையாக நடந்து முடிந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற விழாவில் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெற்றனர். மார்ச் 30ம் நாள் கணேஷ் குமரேஷ் வயலின் கச்சேரி நடைபெற்றது. மறுநாள் காலை நித்யஸ்ரீ மகாதேவன் தலைமையில் டொரான்டோ குழுவினர் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி ஆராதனை செய்தனர். இரவு நித்யஸ்ரீ அவர்களின் கச்சேரி நடைபெற்றது. மறுநாள் உன்னி கிருஷ்ணனின் கச்சேரி நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 14 அன்று விசாகா ஹரியின் ஆண்டாள் கல்யாணம் காதாகாலட்சேபம் களைகட்டியது. மறுநாள் டி.ம்.கிருஷ்ணாவின் கச்சேரி நடந்தது. இந்த விழா நிகழ்ச்சிகளை www.manram.org என்ற வலைதளத்தில் காணலாம். அன்பர்களின் ஆராதனைப் பாடல்களையும் கேட்கலாம்.

வர இருப்பவை

2007 மே 26, சனிக்கிழமை அன்று மாலை 6.30க்கு ஸ்ரீ லாஸ்யா கலாகேந்தர் பெருமை யுடன் அளிக்கும் 'நந்தனார்' நாட்டியநாடகம் அன்று நடக்கவிருக்கிறது. வாழ்வின் அடிமட்டத்திலிருந்த நந்தனார் நாயன்மாராக மெருகேரும் புராணக் கதை. மெட்டு அமைப்பும் நடன அமைப்பும் டாக்டர் அலகானந்தா; நாட்டிய நாடகம் ஆக்கலும் பாடல்களும் அலமேலு மணி. இந்த நிகழ்ச்சி லெஸ்டர் பியர்ஸன் அரங்கில் பிராம்டனில் நடைபெறுகிறது. நிகழ்ச்சி பற்றி அறியத் தொலைபேசி: 905.712.0673 அல்லது 416.724.8245.

அலமேலு மணி

© TamilOnline.com