தேவையான பொருட்கள்: பீட்ரூட் இலை (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம் பயத்தம்பருப்பு - 1 கிண்ணம் கீன்வா (வேகவைத்தது) - 2 கிண்ணம் தேங்காய்ப் பால் - 1/2 கிண்ணம் இஞ்சி - 1 சிறுதுண்டு பெருங்காயம் - 1 தேக்கரண்டி மிளகு சீரகப் பொடி - 1 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - சிறிதளவு முந்திரிப்பருப்பு - 8 நெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை பயத்தம்பருப்பை வாணலியில் சிறிது வாசனை வர வறுத்து, குழைய வேகவைக்கவும். அத்துடன் கீன்வா சேர்த்து உப்பு சேர்த்து, தேங்காய்ப் பால் விட்டுக் கொதிக்க வைக்கவும். ஒன்றுசேர்ந்து வந்ததும் கீரையை வதக்கிப் போட்டு நெய்யில் முந்திரி, மிளகு சீரகப் பொடி, பெருங்காயம், இஞ்சி இவற்றை வறுத்துப் போட்டுக் கறிவேப்பிலை நறுக்கிப் போட்டு இறக்கவும். இது மிகவும் சுவையான பொங்கல்.
பீட்ரூட் இலையைக் கடைசியாகவும், நெய்யில் வதக்கிப் போட்டும் செய்யலாம்.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |