ஆகஸ்ட் 20, 2017 அன்று 'ஹிந்து விவாஹ்' அமைப்பின் இலையுதிர் காலக் காலாண்டுக்கான ஒற்றையர் சந்திப்பு ரோஸ்வெல் ஹாலிடே இன்னில் நடந்தது. இதில் 63 பேர் பங்கேற்றனர். தனிநபர்க்கான இந்த இரண்டாவது நிகழ்ச்சி அட்லாண்டா இந்துக்களின் ஆதரவில் இலவசமாக நடத்தப்பட்டது.
மணம்புரிய விரும்பும் ஆண், பெண்கள் மதுவில்லாச் சூழலில் சந்தித்து உரையாடி புரிதலோடு திருமணக் கட்டத்தைத் தொட வசதி செய்வது, லாபநோக்கற்ற 'விவாஹ்' அமைப்பின் நோக்கமாகும். இதை 2016 நவம்பரில் டாலஸ் நகர இந்துக்கள் தொடங்கினர். தற்போது ஹூஸ்டன் மற்றும் அட்லாண்டாவிலும் இது செயல்படுகிறது. இந்த முறை இளையோர் தவிர, நடுத்தர வயதினர் மற்றும் வயது முதிர்ந்தோருக்கும் குழுக்கள் இருந்தன.
அடுத்த அட்லாண்டா நிகழ்ச்சி டிசம்பர் 3, 2017 ஞாயிறன்று நடைபெறும். மேலும் விவரங்களுக்கும், தன்னார்வத் தொண்டு செய்யவும் தொடர்புகொள்க
வலைமனை: www.HinduVivah.org மின்னஞ்சல்: Atlanta@UsVivah.com.
அம்பிகா ஷங்கர், அட்லாண்டா, ஜார்ஜியா |