TNF அறிமுக அரங்கங்கள்
கேன்சஸ்
செப்டம்பர் 9, 2017 அன்று கேன்சஸ் நகரத் தமிழ்ச்சங்கத் தலைவி திருமதி. சாந்தி விஞ்சிமூர் தலைமையில் தமிழ்நாடு அறக்கட்டளை பற்றிய விளக்கவுரையை தலைவர் முனை. சோமலெ சோமசுந்தரம் வழங்கினார். அவ்வமயம்

வெள்ள நிவாரணத் திட்டக் குறிப்பேட்டை வெளியிட்டு, கேன்சஸ் நகர தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பைப் பாராட்டினார்.

இளையோருக்கான TNF இன்டர்ன்ஷிப் மற்றும் சேவைத் திட்டங்களில் கேன்சஸ் தமிழர்கள் எப்படிப் பங்குபெறலாம் எனக் கலந்துரையாடல் நடைபெற்றது. திரு. கணேஷ் சிவேலூரி தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் சேவை

செய்யவும், நிதி உதவி செய்யவும் TNF வாய்ப்புக் கொடுப்பதை வரவேற்றுப் பேசினார்.

*****


டுல்ஸா (ஓக்லஹாமா)
செப்டம்பர் 9, 2017 அன்று தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு டுல்ஸா நகரத் தமிழ் மக்கள் ஓக்லஹாமா தமிழ்ச்சங்கம் வாயிலாக தமிழ்நாடு அறக்கட்டளைக்கு வழங்கிய நற்பணியைப் பாராட்டி, TNF பற்றிய தன் அறிமுக உரையைத்

தொடங்கினார் முனை. சோமலெ சோமசுந்தரம். இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழக கிராமப் பள்ளிகளுக்கு உதவும் எண்ணம் பலருக்கும் வந்துள்ளதாக கடலூரைச் சேர்ந்த சிவகுமார் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்ந்து

தமிழகத்திற்கு உதவ டுல்ஸா தமிழர்கள் விரும்புவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வைத்தியநாதன் சுப்பிரமணியன் தெரிவித்தார். Tandoori Guys திரு. பச்சையப்பன் காலை உணவை விருந்தினர்களுக்கு இலவசமாக வழங்கித்

தன் கொடையுள்ளத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு:
வைத்தியநாதன்: (918) 645 4380
கற்பகவள்ளி வைத்தியநாதன், டுல்ஸா

*****


பென்டன்வில்



செப்டம்பர் 8, 2017 அன்று, அர்க்கன்சாஸ் மாநிலத்தின் பென்டன்வில் நகர ஹிந்து ஆலயத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை பற்றிய அறிமுக அரங்கம் நடைபெற்றது. TNF தலைவர் சோமலெ சோமசுந்தரம் அறக்கட்டளையின்

செயல்பாடுகளை விளக்கிப் பேசினார். நிகழ்ச்சியில் குழந்தைகளும் பெற்றோர்களும் பல கேள்விகளைக் கேட்டு ஆர்வத்தோடு பங்கேற்றனர். நான்காம் வகுப்புப் பயிலும் தன் மகள் ஆக்ரிதியுடன் பங்கேற்ற திருமதி. காயத்ரி தன்

மகளைத் தமிழகத்தில் TNF சேவை செய்துவரும் பள்ளிகளுக்கு அழைத்துச்செல்லும் ஆர்வம் உருவாகியுள்ளது என்றார். தமிழ்ப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் அருள்குமார் மகிழ்ச்சி தெரிவித்துப் பேசினார்.

உங்கள் ஊரில் TNF அறிமுக அரங்கம் ஏற்பாடு செய்ய விருப்பமிருந்தால் president@tnfusa.org என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.

*****


அர்க்கன்சாஸ்



செப்டம்பர் 7, 2017 அன்று, தமிழ்நாடு அறக்கட்டளை மூலம் சென்னை வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை அனுப்பிய அர்க்கன்சாஸ் தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி தெரிவித்தும் தமிழ்நாடு அறக்கட்டளையின் பல்வேறு திட்டங்களை

அறிமுகப்படுத்தியும் அறக்கட்டளைத் தலைவர் முனை. சோமலே சோமசுந்தரம் பேசினார். தமிழ்ச் சங்கத் தலைவர் முனை. மகிழ் ராஜேந்திரன் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகக் குழுவினரும் தமிழார்வலர்களும்

கலந்துகொண்டனர். TNF மூலம் பெறப்பட்ட நிதிக்கான திட்டங்களையும் வரவு செலவையும் விளக்கும் வெள்ள நிவாரணக் குறிப்பேட்டைக் குழுவிடம் வழங்கிப் பேசினார் சோமலெ. அடுத்த தலைமுறைக்கான TNF கோடைக்காலப்

பயிற்சித் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதாகத் திருமதி. சுஜாதா சீனிவாசன் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு: www.tnfusa.org

© TamilOnline.com