அக்டோபர் 26 முதல் நவம்பர் 5ம் தேதிவரை ஃப்ரீமான்ட் சித்திவிநாயகர் ஆலயத்தில் அதிருத்ர மஹாயக்ஞ மஹோத்சவம் நடைபெற உள்ளது. சிருங்கேரி மற்றும் காஞ்சி காமகோடி பீட சங்கராசாரியர்களின் நல்லாசிகளுடன் பிரதம ஆசார்யர் வேதபிரம்ம ஸ்ரீ உமாஷங்கர் தீக்ஷித் அவர்களின் தலைமையில் இது நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக நந்தலாலா மிஷன் நிறுவனர் ஸ்ரீலஸ்ரீ மதியொளி சரஸ்வதி அவர்கள் வந்திருந்து சிறப்பிக்க உள்ளார். கலிஃபோர்னியாவின் விரிகுடாப் பகுதியிலே இந்த உன்னதமான நிகழ்ச்சி நடைபெறுவது முதன்முறை ஆகும்.
சிவபெருமானின் வழிபாடுகளிலே மிக உயர்ந்தது அதிருத்ரம். நாளுக்கு 11 முறை வீதம் 11 நாட்களுக்கு, 121 வேதவிற்பன்னர்கள் மொத்தம் 14641 முறை ருத்ர உச்சாடனம் செய்வது அதிருத்ரம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீருத்ரம் நமகம், சமகம் ஆகிய இரண்டு பாகங்களைக் கொண்டது ஆகும்.
உலகநன்மைக்காக மேற்கொள்ளப்படும் இந்த மஹோத்சவத்தில் அன்பர்கள் பெருவாரியாகப் பங்கேற்று இறையருள் பெறலாம், நிகழ்ச்சி நிரலை அறியவும், பங்கேற்கவும், தன்னார்வத் தொண்டு புரியவும்
வலைமனை: fremont.svcctemple.org தொலைபேசி எண்: 510-403-4256 ஆலய முகவரி: 40155 Blacow Road, Fremont, CA 94538
நர்சி கஸ்தூரி, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |