ஸ்ரீமத் ராமானுஜரின் வாழ்க்கைச் சித்திரம் முடிவடைகிறது என்பதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது. அதை நேர்த்தியாக எழுதி வந்த பா.சு. ரமணன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். இதுபோல் பகவான் ரமண மகரிஷி, ராகவேந்திரர், மஹாபெரியவாள், ஷீரடி சாய்பாபா இவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தென்றல் அளிக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
பிராந்தியங்கரை ராமபத்ரன்
*****
உயிர்த்தெழும் சிற்பங்களாக, வணங்கித் தொழுதிடும் தெய்வங்களாக, கண் இமைக்காமல் ரசிக்கும்படியான வண்ணத்திலும் .கருமையிலும் இறையுருவங்களை ஓவியங்களாகத் தந்து மகிழ்விக்கும் 'ஓவியர் முனீஸ்வரன்' நேர்காணல் மிகச்சிறப்பு. முன்னோடி அரசஞ்சண்முகனார் பற்றிய விவரங்கள் அரியன.
'பெரியமாடு' அந்தக்கால நினைவுகளை அப்படியே அள்ளித் தெளித்த யதார்த்தமான சிறுகதை. கவிதைப் பந்தலில் 'பேசப்படாதவைகள்' பேசும்படி இருந்தது.
சசிரேகா சம்பத், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |