1. 5 என்ற எண்ணை ஐந்துமுறை பயன்படுத்தி, கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ மொத்தத் தொகை 21 வருமாறு செய்யவேண்டும். முயல்வோமா?
2. ஒரு பண்ணையில் சில பசுக்களும் கோழிகளுமாகச் சேர்த்து மொத்தம் 42 இருந்தன. அவற்றின் கால்களின் எண்ணிக்கை 124 என்றால் பசுக்கள் எத்தனை, கோழிகள் எத்தனை?
3. 8 x ... / 14 + ... - 4 = 6. இந்த வரிசையில் மறைந்திருக்கும் எண்கள் எவை?
4. ராமு, சோமுவிடம் 3:5 என்ற விகிதத்தில் சில சாக்லேட்டுகள் இருந்தன. ராமுவின் தாத்தா இருவரிடமும் மேலும் ஐந்து சாக்லேட்டுக்களைக் கொடுத்தார். இப்போது அவை 5:8 என்ற விகிதத்தில் மாறிவிட்டன. ராமு, சோமுவிடம் இருந்த சாக்லேட்டுக்களின் எண்ணிக்கை என்ன?
5. A, B, C என்னும் மூவரும் வியாபாரிகள். A,B இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்றால் அன்று 900$க்கு விற்பனை ஆகிறது. B,C இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்றால் அன்று 800$க்கு விற்பனை ஆகிறது. A,C இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்றால் அன்று 700$க்குப் பொருட்கள் விற்பனை ஆகின்றன. அப்படியானால் தனித்தனியாக ஒவ்வொருவரும் செய்த விற்பனைத் தொகை எவ்வளவு?
அரவிந்த்
விடைகள்1. இயலும்
55 + (5/5) - 5 = 25 + 1 - 5 = 21
2. பசுக்கள் = x ; கோழிகள் = y. அவற்றின் மொத்த எண்ணிக்கை = x + y = 42;
x பசுக்களின் கால்கள் = 4x;
y கோழிகளின் கால்கள் = 2y
4x + 2y = 124;
x + y = 42
x = 42 - y
4x + 2y = 124 = 4 (42 - y) + 2y = 124
168 - 4y + 2y = 124
-2 y = 124 - 168 = -44
y = 22
x = 42 - y = 42 - 22 = 20
பண்ணையில் இருந்த கோழிகளின் எண்ணிக்கை = 22; பசுக்களின் எண்ணிக்கை = 20
3. அந்த எண்கள் = 12, 6
8 x 12 / 14 + 6 - 4 = 96/16 = 6
4. ராமு. சோமுவிடம் இருந்த சாக்லேட்டுகளின் எண்ணிக்கை = 3:5
தாத்தா கொடுத்தது = 5
3x + 5; 5x + 5 = 5 : 8
8(3x + 5) = 5 (5x + 5)
24x + 40 = 25x + 25
x = 15
ராமுவிடம் இருந்த சாக்லேட்டுக்களின் எண்ணிக்கை = 3 x 15 = 45; சோமுவிடம் இருந்த சாக்லேட்டுக்களின் எண்ணிக்கை 5 x 15 = 75. தாத்தா கொடுத்த ஐந்து சாக்லேட்டுக்களைச் சேர்க்க = 45 + 5 = 50; 75 + 5 = 80 = 50 : 80 = 5 : 8
5. A + B = 900
B + C = 800
A + C = 700
A + B = 900
A + C = 700
2A + B + C = 1600
2A = 1600 - (B + C) = 1600 - 800 = 800;
A = 400
B = 900 - A = 900 - 400 = 500
C = 700 - A = 700 - 400 = 300
ஃ A = 400; B = 500 ; C = 300