தேவையான பொருட்கள் மணத்தக்காளி வற்றல் - 1 கிண்ணம் புளி - அரை எலுமிச்சை அளவு மிளகாய்ப்பொடி - 1/4 கிண்ணம் பெருங்காயம் - 2 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் - 1/2 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப வெல்லம் - 1 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை மணத்தக்காளி வற்றலை எண்ணெயில் பொரிக்கவும். புளியை ஊறவைத்து, மிளகாய்ப்பொடி, பெருங்காயம், உப்புடன் நன்றாக அரைத்து கெட்டியாய் எடுக்கவும். நல்லெண்ணெயில் கடுகு தாளித்து, கடலைப்பருப்பு போட்டுச் சிவந்ததும் புளிக்கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும். வெல்லம் போட்டுக் கொதிக்கும்போது கறிவேப்பிலை போடவும். புளி வாசனை போகக் கொதித்ததும் வறுத்த மணத்தக்காளி போட்டு ஒரு கொதி விட்டு இறக்கவும். சூப்பர் ஊறுகாய் ரெடி.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |