காதல் கசக்குதய்யா


துருவா நாயகனாக நடிக்கும் படம் 'காதல் கசக்குதய்யா'. வெண்பா நாயகியாக அறிமுகமாகிறார். சார்லி, ஜெயகணேஷ், லிங்கா, கல்பனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரண் இசையமைக்க, புதுமுக இயக்குநரான துவாரக் ராஜா இயக்கியுள்ளார். "இது ஒரு குதூகலமான படம். 'ஒய் திஸ் கொலவெறிடி' என்று காதலின் பெயரால் பெண்களை திட்டிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், காதலைக் குறித்து பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உணர்வோடு சொல்கிறது இப்படம்" என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com