நெடுநல்வாடை


தாத்தா-பேரன் பாசத்தை மையமாக வைத்து நம் கலாசாரத்தின் பெருமையைக் கூறும் வகையில் உருவாகிறது 'நெடுநல்வாடை'. நெல்லை, சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஐம்பது பேர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். 'பூ' படத்தில் நடித்த ராமு, 70 வயது விவசாயியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்கள்: வைரமுத்து. இசை: ஜோஸ் பிராஃங்க்ளின். இயக்கம்: செல்வகண்ணன்.

அரவிந்த்

© TamilOnline.com