கணிதப்புதிர்கள்
1) விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?

8 + 6 + 12 = 13
12 + 8 + 16 = 18
16 + 10 + 20 = .....

2) 3 என்ற எண்ணை ஐந்துமுறை பயன்படுத்தி, கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ மொத்தத் தொகை 31 வரவழைக்க வேண்டும். இயலுமா?

3) ஒன்று முதல் பத்துவரை உள்ள எண்களைக் கொண்டு, கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ விடை 100 வரச் செய்யவேண்டும். இயலுமா?

4) ஆடுகளும் கோழிகளும் இணைந்த ஒரு பண்ணையில் அவற்றின் தலைகளின் எண்ணிக்கை 74 ஆகவும், கால்களின் எண்ணிக்கை 196 ஆகவும் உள்ளது என்றால் ஆடுகள் எத்தனை, கோழிகள் எத்தனை?

5) ஒரு பேட்டரி மற்றும் கேமராவின் விலை இரண்டும் சேர்ந்து 110 டாலர். பேட்டரியின் விலையைவிட கேமராவின் விலை 100 டாலர் அதிகம் என்றால், பேட்டரியின் விலை என்ன, கேமராவின் விலை என்ன?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com