பள்ளிக்கூடத்தில் பாடுகிறார் பரத்வாஜ்
தங்கர்பச்சன் இயக்கத்தில் உருவாகும் 'பள்ளிக்கூடம்' படத்துக்கு இசையமைக்கும் பரத்வாஜ், படத்தில், கவிஞர் சிநேகன் எழுதிய 'பள்ளிக்கூடம் போகலாம்' என்ற பாடலையும் பாடியிருக்கிறார்.

நாயகனாக நரேன் நடிக்க, நாயகியாக ஸ்ரேயா ரெட்டி, சினேகா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில், கானா உலகநாதன், சீமான், வி. சேகர் என்று பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கான கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை கவனிக்கும் தங்கர்பச்சன், முக்கிய பாத்திரம் ஒன்றிலும் நடிக்கிறார்.

இசையமைப்பாளர் பரத்வாஜ் 'ட்ரை ஸ்டார்' என்றொரு ஆடியோ நிறுவனம் ஒன்றை சமீபத்தில் துவக்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் 'பள்ளிக்கூடம்' படத்தின் பாடல் உரிமைகளை வாங்கி வெளியிடவிருக்கிறார் என்பது சமீபத்திய தகவல்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com