சஹா நாதன் நூல் வெளியீடு
ஜூலை 17, 2017 அன்று திரு. சஹா நாதன் அவர்கள் எழுதிய 'The Golden Key For Wellness' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. திரு. கல் ராமன் (CDO, Samsung Electronics) தலைமை தாங்கினார். வேத மையத்தின் துணைவேந்தர் திரு. ஷண்முக மூர்த்தி பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார். நம் உடல், மனம் இவற்றை ஒத்திசைவுக்கு எப்படிக் கொண்டுவருவது என்பதைப் பற்றியது இந்த நூல் என்று நூலாசிரியர் குறிப்பிட்டார்.

மணிமேகலை பிரசுரத்தின் புத்தகக் கண்காட்சி ஒன்றும் நடைபெற்றது. சியாட்டில் தமிழ்ச்சங்கம் மற்றும் பல தமிழ் அமைப்புகள் நிகழ்ச்சியை நடத்த உதவின. திரு. ரவி தமிழ்வாணன் இந்தியாவிலிருந்து இதற்காகவே வந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

தொடர்புக்கு: சஹா நாதன் - 425-753-4343

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com