TNF ஜார்ஜியா: கணிதப் பயிற்சி முகாம்
ஜூலை 17-21, 2017 நாட்களில் தமிழ்நாடு அறக்கட்டளையின் ஜார்ஜியா கிளை நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான கணிதப் பயிற்சி முகாம் ஒன்றை அட்லாண்டாவில் நடத்தியது. இல்லினாய் ஹார்ப்பர் கல்லூரியின் கணிதப் பேராசிரியர் டாக்டர். கிருஷ்ணய்யா ரேவுலூரி, 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 'Math Counts' போட்டிக்கான பயிற்சிகளையும், 'Pythagorean Triples' போன்ற கணிதக் கோட்பாடுகளையும் கற்பித்தார். ஊர்வி ஐயர், அஞ்சன், சிவமலை, கிருஷ்ணா, ஷ்ரேயா ஆகிய பதின்மவயதுத் தன்னார்வத் தொண்டர்கள் இதில் உதவினர்.

இந்த முகாமின் மூலம் திரட்டப்பட்ட 3000 டாலர், அறக்கட்டளையின் இந்திய கிராமப்புறக் குழந்தைகளின் கல்விக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக டாக்டர். ரேவுலூரி இலவசமாகவே இந்தப் பயிற்சி முகாமை நடத்தித் தந்தார். ஆண்டாள் பாலு, காமாக்ஷி தாஸ் ஆகியோர் இதற்குப் பேருதவி செய்தனர்.

மேலும் தகவலுக்கு: tnfga.org

ஜெயா மாறன்,
அட்லாண்டா

© TamilOnline.com