தேவையான பொருட்கள் குதிரைவாலி அரிசி - 1 கிண்ணம் துவரம்பருப்பு - 1/2 கிண்ணம் கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி மிளகாய்வற்றல் - 4 பச்சைமிளகாய் - 4 பெருங்காயம் - சிறிதளவு தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி ரீஃபைன்ட் ஆயில் - 2 தேக்கரண்டி நெய் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப மிளகு, சீரகம் - விருப்பப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை அரிசியுடன் துவரம்பருப்பை ஊறப்போடவும். ஊறியதும் களைந்து உப்பு, மிளகாய்கள், பெருங்காயம் சேர்த்து, சற்று ரவைபோல அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்களை விட்டுக் கடுகை வெடிக்கவிடவும். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை போட்டு வறுத்துக்கொள்ளவும். அதில் அரைத்த விழுதைப் போட்டு இரண்டு கிண்ணம் தண்ணீர் விட்டுக் கிளறவும். கெட்டியானதும் எடுத்துச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லித் தட்டில் வைத்து வேகவிடவும். பதினைந்து நிமிடம் ஆனதும் எடுத்துச் சாப்பிடலாம். நீளவாட்டிலும் உருட்டி வைக்கலாம். தேங்காய்ச் சட்னி, தக்காளி அல்லது வெங்காயச் சட்னியுடன் சாப்பிடச் சுவையோ சுவை. தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |