மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
2017 ஜூன் 1 முதல் 30 வரை, மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி, லாஸ் ஏஞ்சலஸ், சான்ட ஃபே, டாலஸ், சிகாகோ, அட்லாண்டா, நியூ ஜெர்சி ஆகிய இடங்களுக்கு வருகை தந்திருந்தார். தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் அரவணைத்து அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம், பஜனை மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன.

ஜூலை மாதத்தில் அம்மாவின் பயண விவரம்:
மேன்செஸ்டர் 07.01 - 07.02
வாஷிங்டன் டி.சி. 07.04 - 07.05
டொரன்டோ, கனடா 07.07 - 07.10

இலவசப் பொதுநிகழ்ச்சிகளில் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம், பஜனை ஆகியவை நடைபெறும். டொரன்டோவில் ஆன்மீக முகாம் (retreat) நடைபெறும். இதில் தியான வகுப்பு, சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும். டொரன்டோவில் குருபூர்ணிமா சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

அம்மாவின் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.embracingtheworld.org
வலைமனை: www.amma.org

சூப்பர் சுதாகர்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com