ஜூன் 18, 2017 அன்று கோபூஜை கலிஃபோர்னியா விரிகுடாப்பகுதியின் சான் மார்ட்டின் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ வல்லப மஹாகணபதி திருக்கோயிலில் நடந்தேறியது. அண்மையில் நான்கு பசுக்களும் ஒரு காளையும் இக்கோயில் கோசாலைக்கென ஹூஸ்டனிலிருந்து வாங்கிவரப்பட்டுள்ளன. அன்று, கோமாதா பூஜை, கோ மஹாலக்ஷ்மி பூஜை, கணபதி மூலமந்திர திரிசதி பூஜை, ஹோமம் ஆகியவை பக்தியுடன் நடந்தன. பக்தர்களின் பாடிய பஜனைக்கிடையே விழா நிறைவேறியது.
கோவிலுக்கு வாங்கப்பட்டவை பாரதத்தில் தோன்றிய கிர் இனப் பசுக்கள் ஆகும். தற்போது பிரேஸில், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் இது பிரசித்தி அடைத்துள்ளது. தனித்துவமான திமிலுடன் கம்பீரமான தோற்றம் கொண்டது. மகத்தான மருத்துவ குணங்களும், தெய்வீக சக்தியும் கொண்டவையாக இந்தப் பசுக்கள் கருதப்படுகின்றன.
இந்தக் கோவிலில் ஸ்ரீ வல்லபாதேவியுடன் இணைந்திருக்கும் 6½ அடி உயர ஸ்ரீவல்லப மஹாகணபதியின் திருக்கோலம் வட அமெரிக்காவில் முதலானது.
பிரதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 4:00 மணிக்கு கோபூஜை, ஸ்ரீ வல்லப மஹாகணபதி ஹோமம், ஸ்ரீ வல்லப மஹாகணபதி மூலமந்திர திரிசதி தவிரப் பலவகை பூஜைகளும் பாராயணங்களும் நடைபெறும்.
நிகழ்ச்சி விவரங்களுக்கு வலைமனை: www.vvgc.org |