ஜூலை 2017: வாசகர் கடிதம்
ஜூன் தென்றலில். குளச்சல் மு. யூசுப் அவர்களின் வாழ்க்கை, எழுத்தார்வம் மற்றும் படைப்புகளைத் தெளிவாகத் தொகுத்திருக்கிறார் அரவிந்த். 'நெய்ப்பாயாசம்' சிறுகதை நெஞ்சைப் பிசைந்தது. செல்வமுரளி பற்றிய கட்டுரை தமிழ்நாட்டிலேயே வெளிவந்த மாதிரித் தெரியவில்லை. 'நோன்புக்கஞ்சி' கதை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்ப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் 'மொய்யில்லா மொய்விருந்து' அருமை! குடும்பப் பாசத்தை மையமாக வைத்து, பெற்றோரைப் பேணுதலே பெரும்பணி என்பதைத் தெளிவாக்கியது 'தரிசனம்'. சுவாதி கிரியின் விளையாட்டுத் திறம் வியக்க வைக்கிறது. ஜெயஶ்ரீ உள்ளால் சுயமுயற்சியால் பெருஞ்செல்வரான பெண்மணியான குறிப்பைக் கொடுத்து நம்மவர் தரவரிசையை வெளிச்சமிட்டது நம்பிக்கைக்கு வித்திடுவதாக உள்ளது.

நெல்லை ஆர். பத்மனாபன்,
டப்ளின், கலிஃபோர்னியா

© TamilOnline.com