ரூபாய்


சந்திரன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடிக்கும் படம் ரூபாய். கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர். மனோகர், மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களை யுகபாரதி எழுத, இசையமைக்கிறார் டி. இமான். பிரபுசாலமன் தயாரிக்கும் இப்படத்தை, அன்பழகன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே “சாட்டை”என்ற வெற்றிப்படத்தைத் தந்தவர். அந்தப் படத்தைப் போலவே சமூக அவலங்களைச் சுட்டிக் காட்டியிருக்கும் படமாக இது உருவாகியுள்ளதாம்.

அரவிந்த்

© TamilOnline.com