ஒண்டிகட்ட


விக்ரம் ஜெகதீஷ் நாயகனாக நடிக்கும் படம் 'ஒண்டிகட்ட.' நாயகியாக நேகா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் கலைராணி, ஆர். தர்மராஜ், சாமிநாதன், சென்ட்ராயன், மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை கபிலன், தர்மா எழுத, கதை எழுதி, இயக்குகிறார் பரணி. பிரபல இசையமைப்பாளரான இவர் இயக்கும் முதல்படம் இது. படத்தின் இசையமைப்பாளரான இவரே, சில பாடல்களையும் எழுதியிருக்கிறார். “நாம் பிறந்த போதும் ஒண்டிக் கட்டையாகத்தான் பிறக்கிறோம். போகும்போதும் ஒண்டிக் கட்டையாகத்தான் போகப் போகிறோம். இதைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் பரணி. பொருத்தமான தலைப்புதான்.

அரவிந்த்

© TamilOnline.com